Tamil Quotes 26 quotes

storiesஆசை விக்னேஷின் மாமா மதுரையிலிருந்து அவனுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். விக்னேஷ் இப்படி ஒரு பேனாவைப் பார்த்தது இல்லை. இவன் வகுப்பில் படிக்கும் எம். எல். ஏ. மகனிடம் கூட இப்படிப் பட்ட பேனா இல்லை. பேனாவின் மூடியும், முள்ளும் தங்கம் போல பளபளப்பாக இருந்தது. பள்ளிக்கூடம் போனதும் பேனாவை எல்லோரிடமும் காட்டி மகிழ்ந்தான். வகுப்பில் முதல் மாணவனாகவும் ஒழுக்கமானவனாகவும் விளங்கிய விக்னேஷ்சை உற்சாகப்படுத்த விரும்பிய அவன் மாமா. நீ படித்து பெரியவனாகி என்ன வேலைக்குப் போவாய் என்று கேட்டார். நான் படித்து கலெக்டராக வருவேன் என்றான் விக்னேஷ். இதைக் கேட்ட அவன் அப்பா விரலுக்கேத்த வீக்கம் வேண்டும். நீ சாதாரண விவசாயின் மகன். நீ ஆசைப்படுவதில் அளவு வேண்டும் என்றார். ஒரு ஏழையின் மகன் கலக்டராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று நினைத்தான். வகுப்பில் கவலையாக இருந்தான். வகுப்பு ஆசிரியர் அவனைப் பார்த்து விசாரித்தபோது, அவன் கவலையை சொன்னான். அவன் சொன்னதைக் கேட்டதும் ஆசிரியர் இதற்கு நானே உனக்கு நல்ல பதிலைச் சொல்லுவேன். ஆனாலும் இன்று மாலை வரை காத்திரு. எது பேராசை என்று புரிந்து கொள்வாய் என்றார். அன்று மாலை பள்ளியின் ஆண்டு விழா. அதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் பேசும் போது, கூட்டத்தில் உட்கார்ந்திருந்த விக்னேஷிடம் வந்த ஆசிரியர், உன் சந்தேகத்தை அவரிடமே கேள் என்றார். தைரியமாக எழுந்து கலக்டரிடம் ஒரு ஏழை விவசாயியின் மகன் கலெக்ட்ராக வர ஆசைப்படுவது பேராசையா? என்று கேட்டான். நிச்சயமாக இல்லை. நேர்மையான வழியில் பெறுவதாய் இருந்தால் உலகத்தைக் கூட வாங்க ஆசைப்படலாம். உழைப்பும் உறுதியான முயற்சியும் இருந்தால் எதற்கும் ஆசைப்படலாம். அது பேராசை ஆகாது என்று பேசி முடித்தார் கலெக்டர். இருபது ஆண்டுகள் கழிந்தன. அதே பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் விக்னேஷ் ஆண்டு விழாவில் பேசிக் கொண்டிருந்தார். நம்பிக்கையும் உறுதியான முயற்சியும் உழைப்பும் தர தயாராக இருந்தால் கலக்டராக மட்டுமல்ல. இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர ஆசைப்படுவது கூட பேராசை ஆகாது என்று சொன்ன போது மாணவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். நீதி : விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம்.
Unknown Share as Image


storiesசிறுத்தையின் ஏமாற்றம் ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு கருப்பு மானையும், ஒரு புள்ளி மானையும் பார்த்து, மலையடிவாரத்திற்குச் சென்றது. பின், எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யும் நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்திற்கு வந்து வெவ்வேறு பாதைகளில் ஓடின. சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. எதைத் துரத்தலாம் என்று யோசித்து பிறகு, கருப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும் என்று கருப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போனது. உடனே சிறுத்தை அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. புள்ளி மானைப் பிடிக்கலாம் என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமானும் பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது. இரண்டையும் பிடிக்கமுடியாமல் சோர்ந்துபோன சிறுத்தை, பசி மயக்கத்தில் மயங்கி விழுந்தது.
Unknown Share as Image


storiesசிட்டுக்குருவியின் ஆசை இரண்டு தூக்கணாங்குருவிகள் ஒரு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. ஒருநாள், இரை தேட அவை இரண்டும் வெளியே போயிருந்த சமயத்தில், ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து தூக்கணாங்குருவியின் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது. சிறிது நேரத்தில் ஒரு தூக்கணாங்குருவி பறந்து வந்தது. தன் கூட்டுக்குள் சிட்டுக்குருவி இருப்பதைப் பார்த்து, குருவி அக்கா எங்கள் வீட்டிற்குள் எதற்கு நுழைந்தாய் வெளியே போ என்றது. நான் போகமாட்டேன். உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள். இனிமேல் இது என் வீடு என்றது குருவி. தூக்கணாங்குருவி அங்கிருந்து வருத்தத்துடனும், யோசனையுடனும் பறந்து போனது. சிட்டுக்குருவி, கூட்டில் ஹாயாக உட்கார்ந்துக் கொண்டிருந்தது. திடீரென்று தூக்கணாங்குருவிகளின் கூட்டம் பறந்து வந்து ஒவ்வொன்றும் ஈரமண்னை அலகில் கொத்தி வந்து, கூட்டின் வாசலைக் கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து பின், சிட்டுக்குருவியை கூட்டுக்குள் வைத்து ஒரேயடியாக அடைத்துப் பூசிவிட்டுப் பறந்து போனது. அடுத்தவர்களின் வீட்டிற்குள் நுழைந்தது தவறு என தாமதமாக உணர்ந்த சிட்டுக்குருவி, அந்தக் கூட்டுக்குள்ளேயே மூச்சடைத்து இறந்து போனது. நீதி : அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்பட்டால் இதுதான் கதி.
Unknown Share as Image


storiesவானமும் உயரமும் முன் ஒரு காலத்தில் ஒரு கிழவி தினந்தினம் மோரு வித்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாள். அந்த காலத்தில் வானம் பூமிக்கு மிகவும் பக்கத்தில் இருந்தது. மனிதர்களும் மரம், செடி கொடிகளும் சிறியதாக இருந்தன. தினமும் வானம் இடித்து மோர்க்குடம் கவிழ்ந்துபோய்விடும். இதனால் கிழவிக்கு ரொம்ப கோபமாக இருந்தது. ஒரு நாள் என் மோர கொட்டி என் பொழப்பக்கெடுக்கும் வானமே! நீ பூமியிலிருந்து எட்டு-பத்து வண்டி நிறைய ஏற்றப்பட்ட நூலைப் பிரித்து நீட்டினால் எவ்வளவு தூரம் வருமோ அவ்வளவு தூரம் மேலே செல்லவேண்டும் என்று சாபமிட்டாள். அன்றையிலேருந்து வானம் கண்ணுக்கெட்டாத தூரத்துக்குப் போய்விட்டது.
Unknown Share as Image


storiesமுரட்டு ஆடு ஒரு மலையடிவாரம் பகுதியில் சின்னஞ்சிறு வீடுகள் இருந்தன. அங்கு வாழும் மக்கள் தங்களது பிழைப்புக்காக ஆடு, மாடு இன்னும் பிற கால்நடைகளை வளர்த்து வந்தனர். அதன் அருகே அழகிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. அதனால், அங்கே மலையடிவாரத்தில் பச்சைப்பசேல் என்று புல் வளர்ந்திருந்தது. அவர்கள் வளர்க்கும் ஆடுகள் மலையடிவாரத்தில் வளர்ந்துள்ள புல்லைத் தின்ன அங்கே மேய வரும். மாடுகளால் சரிவில் நிற்க முடியாததால் அவைகள் அங்கு வருவதில்லை. அங்கே ஒரு முரட்டு ஆடு இருந்தது. கொம்புகள் இரண்டும் வளர்ந்து முறுக்கிக் கொண்டு நின்றன. அது மேய்ந்து கொண்டிருக்கும் இடத்தின் அருகே வேறு ஆடுகள் வந்து விட்டால் அவைகளை முட்டி தூர விரட்டி விடும். ஒரு நாள் ஆற்றின் கரையோரம் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்று ஆற்றினோரம் வந்த முதலையைப் பார்த்து பயந்து தப்பி ஓடி முரட்டு ஆடு மேய்ந்து கொண்டிருந்த இடத்தின் அருகே வந்து விட்டது. முரட்டு ஆடு ஓடி வந்த ஆட்டைப் பார்த்து, நான் மேய்ந்து கொண்டிருக்கும் இடத்திற்கு நீ எப்படி வரலாம் என்று கோபமாகக் கேட்டது. அதற்கு அந்த ஆடு, அங்கே முதலையைப் பார்த்தேன். அதனால் வேகமாக ஓடி வந்து விட்டேன் என்று அமைதியாக சொன்னது. முரட்டு ஆடோ அது சொன்னதைக் கேட்கவில்லை. ஓடி வந்த அந்த ஆட்டுடன் சண்டை போட ஆரம்பித்தது. அந்த ஆடோ சமாதானமாகவே பேசியும், முரட்டு ஆடு கேட்கவில்லை. வேறு வழியின்றி அந்த ஆடு முரட்டு ஆட்டுடன் எதிர்த்து நின்று சண்டையிட்டது. மலைச்சரிவான பகுதியில் இரண்டு ஆடுகளும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது முரட்டு ஆடு கால் சறுக்கி ஆற்றில் விழுந்தது. ஆற்றின் கரையோரம் வாயைப் பிளந்து கொண்டு காத்திருந்த முதலை அந்த முரட்டு ஆட்டை கவ்விக்கொண்டு ஆற்றுக்குள் சென்று விட்டது. நீதி : தாந்தான் பெரியவன் தனக்குதான் எல்லாம் தெரியும் என்ற ஆனவம், திமிரு இருந்தால் நஷ்டம் நமக்கே.
Unknown Share as Image


storiesமுட்டாள்களுக்கு வீண் உபதேசம் வளையப்பட்டி என்ற ஊரில் சலவைத் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவரிடம் இரண்டு கழுதைகள் இருந்தன. அவை இரண்டும் ஒரு நாள் மிகவும் வருத்தத்துடன் பேசிக்கொண்டன. நாம் சுமந்து வரும் அழுக்கு துணிகள் மட்டும் சலவை செய்ததும் வெண்மையாக தெரிகின்றது! ஆனால், நாம் மட்டும் ஏன் அந்த துணிகளைப் போன்று வெண்மையாக மாற முடியவில்லை? என்று தங்களுக்குள் கேட்டுக்கொண்டன. அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆடு கழுதைகளின் முட்டாள் தனமான பேச்சை கேட்டு சிரித்தது. பின் கழுதைகளே! நலமா? என்று கேட்டது. ஆடே! நலம்தானே? எங்கள் சந்தேகத்தை தீர்க்க யாரும் வரவில்லையே என்று நினைத்தோம். நல்ல வேளை நீ வந்தாய்! என்று சொல்லி கழுதைகள் இரண்டும் ஆட்டைப் பார்த்தனர். கழுதைகளே! நீங்கள் பேசிக்கொண்டிருந்ததை நானும் கேட்டேன். உங்கள் முட்டாள் தனமான சந்தேகத்தை எப்படிப் போக்குவதென்று எனக்குத் தெரியவில்லை என்று கூறியது ஆடு. இதைக் கேட்ட கழுதைகளுக்கு கோபம் வந்தது. ஆடே எங்களைப் பார்த்து முட்டாள்கள் என்று கூறுகிறாயா? எங்கள் சந்தேகத்திற்கு உன்னால் விடை கூற முடிந்தால் கூறு இல்லையேல் இந்த இடத்தை விட்டு ஓடு என்று கோபமாக கூறின. கழுதைகளே! நீங்கள் என் மீது ஏன் இப்படி கோபப்படுகிறீர்கள்? துணிகளும் நீங்களும் ஒன்றா? முட்டாள்தனமான உங்கள் கேள்விக்கு என்னால் எப்படி பதில் கூற முடியும்? அப்படியே நான் பதில் கூறினால் நானும் உங்களோடு சேர்ந்து முட்டாளாகிவிடுவேன் என்று கூறியது. பொறுமை இழந்த கழுதைகள் இரண்டும் தங்கள் கால்களால் ஆட்டை எட்டி உதைத்தன. வலி தாங்காமல் நொண்டி நொண்டி நடந்து சென்றது ஆடு.
Unknown Share as Image


storiesபூனையைப் பார்த்து பயந்த எலிகள் ஒரு ஊரில் யாரும் தங்காத ஒரு வீட்டில் நிறைய எலிகள் சந்தோசமாக இருந்துச்சாம். அப்போது, ஒரு நாள் ஒரு பூனை அந்த வீட்டிற்கு வந்திச்சாம். அங்கு நிறைய எலிகள் இருப்பதைக் கண்டு பூனைக்கு மகிழ்ச்சியாம். அது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எலியாகப் பிடிச்சு சாப்பிட்டுச்சு. எலிகள் மிகவும் பயந்து நடுங்கிச்சாம். எலிகள் எல்லாம் ஒன்றுகூடி பூனையிடம் இருந்து எப்படித் தப்புவது என்று யோசனை செய்ய, அதில் ஒரு எலி சொல்லிச்சாம் ஒரு மணியை பூனையின் கழுத்தில் கட்டினால், அது நடந்து வரும் போது டிங் டிங் டிங் என்று சத்தம் கேட்கும் நாம் ஓடி ஒளித்து விடலாம். பூனை ஏமாந்து போகும் என்று கூறியது. இதைக் கேட்டதும் எலிகள் எல்லாம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தன. அப்போது ஒரு எலி, இந்த மணியை யார் பூனையின் கழுத்தில் கட்டுவது என்று கேட்டுதாம். இதை கேட்டதும் யாரால் மணியைக் கட்டமுடியும் என்று எலிகள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே மியாவ் மியாவ் மியாவ் என்ற பூனையின் சத்தம் கேட்டவுடன் எலிகள் பயந்து ஓடி ஒளித்துக்கொண்டன. நீதி : முடியாத யோசனையால் எந்தப் பயனும் இல்லை.
Unknown Share as Image


storiesபூனையும் எலியும் ஒரு ஊரில் சக்தி என்றொருவன் இருந்தான். அவன் வீட்டில் எலித்தொல்லை அதிகமாக இருந்ததால் எலியைப் பிடிக்க பூனை ஒன்றை வளர்க்க ஆரம்பித்தான். பூனை வந்ததும் எலிகளால் முன்பு போல தானியங்களை திருட முடியவில்லை. பூனையை விரட்ட வேண்டும் அல்லது நண்பனாக்கி கொள்ள வேண்டும் என்று ஒரு எலி தன் கூட்டத்தினரிடம் கூறியது. அதற்கு ஒரு கிழட்டு எலி பூனை நம் ஜென்ம விரோதி. அதை நண்பனாக்கா வேண்டாம். அதை விரட்டுவதும் நம்மால் முடியாது. அதனால், நாம் வேறு இடத்திற்கு செல்லலாம் என்றது. கிழட்டு எலி சொல்வதைக் கேட்டு மற்ற எலிகள் வீட்டை காலி செய்தது. ஆனால் பூனையை நண்பணாக்கி கொள்ளவேண்டும் என்று சொன்ன எலி மட்டும் போகவில்லை. எப்படியாவது பூனையை நண்பனாக்கிக் கொண்டு கூட்டுக் கொள்ளையடிக்கலாம் என்று அவ்வீட்டிலேயே தங்கி விட்டது. ஒருநாள் அந்த எலியை பூனை பிடித்து விட்டது. பூனையிடம் மாட்டிய எலி, பூனையாரே என்னை விட்டுவிடு. நான் உன் நண்பனாக விரும்புகிறேன். என்னை விட்டு விட்டால் உனக்கு தினமும் விதவிதமான தின்பண்டங்களைத் தருகிறேன். மேலும் உனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் தானே கிடைக்கிறது என்று ஆசை வார்த்தைகள் கூறியது. பூனையோ, ஏ எலியே எனக்கு பாலும் காய்ந்த ரொட்டியும் போதுமானது. நீ நாளை தரும் தின்பண்டத்திற்கு ஆசைப்பட்டு இன்று கிடைக்கும் உனது கறியை இழக்க நான் முட்டாளில்லை என்று சொல்லி எலியைக் கொன்று ருசித்தது சாப்பிட்டது. நீதி : எதிரிகளிடம் நியாயம் எதிர்பார்பது தவறு.
Unknown Share as Image


storiesபஞ்சவர்ண கிளி நீண்ட காலத்துக்கு முன்னர் உலகத்தில் பறவைகள் இருந்தன. ஆனால், அவை எல்லாம் ஒரேமாதிரி சாம்பல் நிற வண்ணத்தில் இருந்தன. ஒரு வசந்த காலத்தில், பறவைகளின் அரசன் பறவைகளுக்கு அழைப்பு விடுத்ததை அறிந்து எல்லாப் பறவைகளும் அரசன் முன்னால் கூடின. கூட்டமாக கூடி வந்த பறவைகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான ஒலி எழுப்பி மகிழ்ந்தன. சில பறவைகள் சில மீட்டர் வரை பறந்தன. சில தத்தி தத்தி நடந்தன. சில நொண்டிச் செல்வது போல் நகர்ந்தன. அவைகள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. அரசப்பறவை, ஓர் இறக்கையை வானத்தை நோக்கி திருப்பியது. வானத்தில் ஒரு பெரிய வானவில் தோன்றின. உடனே எல்லா பறவைகளும் வானத்திலுள்ள வண்ணங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டன. ஊதா, கருநீலம், பச்சை, மஞ்சள், காவி, சிவப்பு என்று அவைகள் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தன. ஓர் அழகான பெரிய வானவில்லை அவர்கள் அதுவரை பார்த்ததே இல்லை. உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் ஒரு நிறத்தைக் கொடுக்கப்போகிறேன். உங்களுக்கு எந்த நிறம் பிடிக்குமோ அதை நீங்கள் வானவில்லில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியது பறவைகளின் அரசன். அடுத்த வினாடி ஒவ்வொரு பறவையும் தனக்கு பிடித்தமான நிறத்தைப் பறிக்க முயன்றன. ஒரு கிளி முன்னால் வந்தது. எனக்கு பச்சை வர்ணமே பிடிக்கும் என்று சொல்லி அது பச்சை நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை பச்சைக்கிளி என்று அழைத்தனர். ஒரு குருவி ஓடி வந்தது. அது மஞ்சள் நிறத்தை அணிந்து கொண்டது. அதை எல்லாரும் மஞ்சள் குருவி என்று அழைத்தனர். எல்லாரையும் தள்ளி விட்டப்படி ஒரு குருவி முன்னால் வந்து சிவப்பு நிறத்தைப் பெற்றுக்கொண்டது. அதை எல்லாரும் செங்குருவி என்று கூப்பிட்டனர். இப்படி எல்லா பறவைகளும் தாங்கள் விரும்பிய நிறத்தைப் பெற்றுக்கொண்டன. ஆனால், ஒரே ஒரு சின்னஞ்சிறிய குருவி மட்டும் தனக்கு நிறம் கிட்டாமல் நின்று கொண்டிருந்தது. அரசப்பறவை அந்தக் குருவியைப் பார்த்தது. நீ ஏன் மற்றவர்களைப் போல் வர்ணம் கேட்கவில்லை? என்று கேட்டது. வரிசையில் எனது முறை வரும் என்று நான் காத்திருந்தேன் என்று சொன்னது அந்த சின்னஞ்சிறு பறவை. எல்லா நிறங்களும் முடிந்து விட்டதே! என்ன செய்வது? என்றது. அரசப்பறவை. அதைக் கேட்டதும், அந்த சின்னஞ்சிறு பறவை அழுதுகொண்டே, நான் எப்போதும் இந்த சாம்பல் நிறத்தில் தான் இருக்க வேண்டுமா? என்றது. அரசப்பறவை சொன்னது, நீ மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து மிகவும் பொறுமையைக் கடைப்பிடிக்கிறாய்! இப்படிப்பட்ட நீ சாம்பல் வர்ணத்தில் இருத்தல் கூடாது, என்று சொல்லி எல்லாப் பறவைகளையும் திருப்பி அழைத்தது. ஒவ்வொரு பறவையிடம் இருந்தும், அது கொஞ்சம் வர்ணத்தை எடுத்து, அந்த சிறிய பறவைக்கு கொடுத்தது. அதனால் அந்த சின்னஞ்சிறிய பறவை, இப்போது மிகவும் அழகாய் காணப்பட்டது. அதைப் பார்த்து மகிழ்ந்த பறவையின் அரசன், அதற்கு பஞ்சவர்ண கிளி என பெயர் வைத்தான். நீதி : பொறுமையாக இருந்தால் நமக்கு கிடைப்பது கிடைக்கும்.
Unknown Share as Image


storiesநேர்மையான பிச்சைக்காரர் ஒரு மன்னனுக்கு ஒரு மனிதன் தனக்கு கிடைக்கும் அதிர்ஷ்டத்தை எப்படி பயன்படுத்துகிறான் என்று அறிய ஆசைப்பட்டான். அதை சோதிப்பதற்கு ஒரு நாள் இரண்டு ரொட்டித் துண்டுகளை வரவழைத்து, விலையுயர்ந்த வைரக்கற்களை ஒன்றினுள் பதுக்கி வைத்தான். பிறகு இரண்டு ரொட்டித் துண்டுகளையும் பணியாளன் ஒருவனிடம் கொடுத்து, தகுதியுள்ள கண்ணியமான மனிதன் ஒருவனுக்கு இந்த கனமான ரொட்டியையும், மற்றொரு சாதாரண ரொட்டியை ஒரு பிச்சைக்காரனுக்கும் கொடு என்று சொன்னான். நீண்ட அடர்ந்த தாடியுடன் சாமியாரைப் போன்ற ஒரு நபருக்கு அந்தப் பணியாளன் வைரக் கற்கள் உள்ள ரொட்டியை அளித்தான். பிறகு மற்றொன்றை ஒரு பிச்சைக்காரனுக்கு அளித்தான். சாமியார் போன்ற நபர் தனக்குக் கிடைத்த ரொட்டியை உற்றுப் பார்த்து இது சரியாக பக்குவப்படுத்தப்படாததால் கொஞ்சம் கனமாக உள்ளது என்று நினைத்து தன் அருகில் வந்து கொண்டிருந்த பிச்சைக்காரனிடம் எனக்குக் கிடைத்த ரொட்டி கனமாக உள்ளது. எனக்கு அவ்வளவு பசியில்லை. ஆகையால் இதை நீ எடுத்துக்கொண்டு உன்னுடையதை எனக்குக்கொடு என்றான். உடனே இருவரும் தங்களுடைய ரொட்டிகளை மாற்றிக்கொண்டனர். உடனே அந்த சாமியாரையும், பிச்சைக்காரனையும் பின் தொடருமாறு தன் வேலையாட்களுக்கு உத்தரவிட்டான் மன்னன். அன்று மாலையே மன்னனிடம் வேலையாட்கள் அவ்விருவரைப் பற்றிய தகவலை கூறினர். சாமியார் போல் தோற்றமளித்தவர் தன் வீட்டுக்குச் சென்று பொய்த் தாடியை எடுத்துவிட்டு, ஆசைதீர ரொட்டியை உண்டு விட்டு, பிறகு பழையபடி தாடியை ஒட்ட வைத்துக்கொண்டு சாமியார் வேடத்தில் பிச்சை எடுக்க கிளம்பி விட்டதாகவும், தன் வீட்டிற்குச் சென்ற பிச்சைக்காரன், தன் மனைவியுடன் ரொட்டியை உண்ணத் தொடங்கியதும் அதற்குள் இருந்த வைரக் கற்களைக் அவனும் அவன் மனைவியும் கண்டனர். வைரக்கற்களை நாமே எடுத்துக்கொள்ளலாம் என்று விரும்பினான். ஆனால், அந்தப் பிச்சைக்காரன், இந்த ரொட்டியை அளித்த அரசுப் பணியாளரிடம் இதைப் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு வைரக் கற்கள் உள்ளிருப்பது அவருக்குத் தெரியாது என்றால், அவருடைய பொருளை அவரிடமே சேர்க்க வேண்டும். ஆனால், தெரிந்தே இவ்வாறு கொடுத்தார் என்றால் இவை அந்தச் சாமியாரைச் சேர வேண்டும். அதுதான் நியாயம் என்று கூறியதாகவும் வேலையாட்கள் கூறினர். அந்தப் பிச்சைக்காரனின் நேர்மையையும், உயர்ந்த உள்ளத்தையும் அறிந்த மன்னன், கடவுளின் அருளால் வைரக் கற்கள் ஒரு போலிச் சாமியாரிடம் சிக்காமல் நேர்மையான ஒரு பிச்சைக்காரனை அடைந்ததை எண்ணி மகிழ்ந்த மன்னன், பிச்சைக்காரனை அரண்மனைக்கு அழைத்து அந்த வைரக்கற்களை அவனுக்கே கொடுத்து மேலும் பல பரிசுகளும் வழங்கினான். பிச்சைக்காரரும் அதை விற்று கிடைத்த பணத்தில் வியாபாரம் செய்து சந்தோசமாக வாழ்ந்தார்.
Unknown Share as Image


storiesநரியின் தந்திரம் ஒரு அடர்ந்த காட்டில் சிங்கம் ஒரு கூட்டம் சேர்த்தது. எல்லா மிருகமும் வந்தது. முதலில் ஒரு குரங்கைக் கூப்பிட்டு, என் உடம்பை முகர்ந்து பார் எப்படி இருக்கு? ன்னு சொல் என்றது சிங்கம். குரங்கு வந்து முகர்ந்து பார்த்துட்டு வாசனை நல்லா இல்லீங்க கொஞ்சம் மோசமாத்தான் இருக்குன்னு சொல்லியது. சிங்கம் கோபமடைந்து என் உடம்பையா அப்படிச் சொல்றேன்னு ஓங்கி ஒரு அறை விட்டுது. குரங்கு கீழே விழுந்துட்டது. அடுத்து ஒரு கரடியைக் கூப்பிட்டு. நீ வா வந்து பார்த்து சொல்லு என்றது. கரடி அந்தக் குரங்கைப் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்தது ஆகா! ரோஜாப்பூ வாசனை! ன்னு சொல்லுச்சு. பொய்யா சொல்றே? ன்னு ஓங்கி ஒரு அறை விட்டது. அதுவும் கீழே விழுந்தது. அடுத்த படியா ஒரு நரியைக் கூப்பிட்டு. நீதான் சரியாச் சொல்லுவ! நீ வந்து சொல்லு என்றது. நரி குரங்கையும் கரடியையும் பார்த்துக்கிட்டே வந்தது. சிங்கத்தை முகர்ந்து பார்த்து மன்னிக்கணும் தலைவா, எனக்கு மூணு நாளா ஜலதோஷம்! என்று சொல்லி நரித் தந்திரமாக தப்பிக்கொண்டது. நீதி : நரியின் தந்திரம் எல்லா மனிதர்களுக்கு இருத்தல் வேண்டும்.
Unknown Share as Image


storiesதொலைந்த மூக்கு ஒரு ஊரில் கார்த்திக் - புவனா என்ற அண்ணன், தங்கை இருந்தார்கள். இருவருக்கும் எப்போதும் சண்டை தான். அண்ணன் கார்த்திக் மகா குறும்பன். அவன் இரண்டாம் வகுப்பு படிக்கின்றான். தங்கை புவனா இன்னும் பள்ளிக்கு செல்லவில்லை. சின்னப் பெண். தாய் தந்தை இருவரும் பணி புரிகின்றார்கள். அப்பத்தாவும் தாத்தாவும் இவர்களுடன் தான் இருக்கிறார்கள். மொத்தம் ஐந்து பேர் இருக்கிறார்கள். ஒரு நாள் காலையில் அப்பாவும் அம்மாவும் பணிக்கு சென்றுவிட்டனர். தாத்தா வெளியே கிளம்பினார். கார்த்திக் இங்க வா. இரண்டு பேரும் சண்டை போட்டுக்க கூடாது. தாத்தா சீக்கிரம் வந்தர்ரேன் என்று சொல்லிவிட்டு கிளம்பினார். பின்னர் கார்த்திக்கும், புவனாவும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அப்போது திடீர் என்று கார்த்திக் உஷ் உஷ் என்று கத்தியபடி ஓடினான். பயத்து போன புவனா அண்ணன் சட்டைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாள். ஒரு பருந்து வந்தது பார்த்தியா? பெரிய பருந்து. அச்சோ அப்புறம்? ஏன் விரட்டிட்டு போனீங்க? அந்த பருந்து உன் மூக்கை கடிச்சி எடுத்துகிட்டு போயிடுச்சு. அதுனாலதான் துரத்திகிட்டு ஓடினேன். ஆனா அதுக்குள்ள பறந்தே போயிடுச்சு என்று பயபடுத்தினான். புவனா அழ ஆரம்பித்துவிட்டாள். அம்மா என் மூக்கு என் மூக்கு என்று அழுதபடியே வீட்டிற்கு சென்றாள். அவள் கத்தின சத்தத்திற்கு அக்கம், பக்கம் உள்ளவர்கள் அனைவருமே பயந்துவிட்டனர். யார் என்ன சொல்லியும் அழுகை நிறுத்தவில்லை. அப்பத்தா அதெல்லாம் ஒன்றும் இல்லை. அண்ணன் விளையாடுகிறான் என்றாள், கேட்கவே இல்லையே. தாத்தா அந்த சமயம் வீட்டிற்குள் வந்தார். என்னாச்சு பாப்பாக்கு? என்று பதட்டமுடன் கேட்டார். தன் அழுகையை நிறுத்தி தாத்தா, நானும், அண்ணனும் விளையாடிக்கிட்டு இருந்தோமா. ஒரு பெரிய பருந்து கருப்பு கலர்ல வந்துச்சா. என் மூக்கை கடிச்சி எடுத்துட்டு போயிடுச்சு தாத்தா. நிலைமையை புரிந்து கொண்டார் தாத்தா. நான் தெருவில் வந்தப்ப ஒரு பருந்து வந்து என்கிட்ட பேசுச்சு. ஒரு அழகான குட்டி பொண்ணுடைய மூக்கை எடுத்துகிட்டு வந்துவிட்டேன். பாவம் அவள் நல்ல பெண்ன்னு சொல்லி மூக்கை என்னிடம் கொடுத்திட்டு பறந்து போயிடுச்சு. இதோ பத்திரமாக என் பாக்கெட்டில் வெச்சிருக்கேன். எங்கே கண்ணை மூடிக்கோ. பாக்கெட்டில் இருந்து ஏதோ எடுப்பது போல் பாவனை செய்து அவள் முகத்தில் வைத்து அழுத்தினார். ஜெய் ஜம்போலி - ஒரு மந்திரம் சொன்னார். ஆகா. மூக்கு ஒட்டியாச்சே. புவனா கண்ணாடியில் பார்த்தாள். குழந்தையை ஏன் இப்படி ஏமாத்துற என்று செல்லமாக கார்த்திக் கன்னத்தை கிள்ளினார் தாத்தா. ஹைய்யா மூக்கு வந்துடுச்சே ஜாலி ஜாலி என்று சொல்லி மீண்டும் ஆனந்தமாக விளையாட துவங்கினர்.
Unknown Share as Image


storiesதூண்டில் மாட்டிய மீனும், தவளையும் ஒரு முறை தூண்டி முள்ளில் குத்தப்பட்டிருந்த புழு துடித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஒரு மீன், மனிதன் எனக்காக அவன் எங்கேயோ இருந்த புழுவைத் தூண்டி முள்ளில் குத்தி, தண்ணீருக்குள் விட்டிருக்கிறான்? என்றது. அட முட்டாளே! அவன் உன்னைப் பிடித்துச் சாப்பிடுவதற்காக அதை ஏவி விட்டிருக்கின்றான்! என்றது தவளை. நன்றி கெட்டதனமாகப் பேசாதே! எப்போதும் நல்லதையே நினை. நல்லது நினைத்தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்! என்று சொல்லிக்கொண்டு அந்த மீன் துடித்துக்கொண்டிருந்த புழுவை விழுங்கியது. பின் மீனும் துடித்துக்கொண்டே பரிதாபமாக ஏமாந்தேனே! என்றது. நன்றி கெட்டதனமாகப் பேசாதே! கெட்டதை நினைத்தால் கெட்டது நடக்கும்; நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும்! என்று மீன் சொல்லியதையே சொல்லிக்காட்டியது தவளை.
Unknown Share as Image


storiesதூங்கு மூஞ்சி வாத்தியார் ஒரு ஊரில் ஒரு வாத்தியார் இருந்தார். அவர் மதியம் சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் தூங்குவது வழக்கம். மாணவர்களைப் பாடம் படிக்கச் சொல்லி விட்டு அவர் வகுப்பறையிலேயே சற்று நேரம் தூங்குவார். மாணவர்கள் ஏன் வகுப்பில் தூங்குகிறீர்கள் என்று கேட்பார்கள். அதற்கு அவர் திறமையாகப் பேசுவதாக நினைத்து, தான் தினமும் கனவுலகிற்குச் சென்று பல பண்டைய காலத்து ஞானிகளை சந்தித்து வருவேன் எனக் கூறுவார். மாணவர்கள் அவர் சொல்வது பொய் என்று தெரிந்துகொண்டு வாத்தியாருக்கு பாடம் கற்றுத்தர ஒரு திட்டம் போட்டார்கள். வாத்தியார் எதிர்பாராத ஒரு நாளன்று அவர் வகுப்புக்குள் நுழையும் நேரம் அனைத்து மாணவர்களும் தூங்குவது போல நடித்தார்கள். மாணவர்களைப் பார்த்த வாத்தியார் அனைவரையும் எழுப்பி ஏன் வகுப்பில் தூங்கினீர்கள் என்று கேட்டுத் திட்டினார். மாணவர்கள் அனைவரும் உங்களைப் போல நாங்களும் கனவுலகில் ஞானிகளைப் பார்க்கச் சென்று வந்ததாகக் கூறினார்கள். வாத்தியார் முகத்தில் ஈயாடவில்லை. அதன்பின் தனது தவறினை உணர்ந்து மாணவர்களுக்கு பாடம் கற்பித்தார் வாத்தியார். நீதி : செய்கிற வேலையை சரியாக செய்தல் வேண்டும்.
Unknown Share as Image


storiesஆந்தை பெற்ற சாபம் கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. ஆந்தைக் குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன. ஒரு நாள், ஒரு ஆந்தைக்குஞ்சு அம்மா எல்லாரும் பகலில் தான் உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். இது ஏன்? என்றது. நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில் தான் கண் தெரியும். அதனால் தான் நாம் பகலெல்லாம் துங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம் என்றது தாய் ஆந்தை. ஏன் கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்தார்? என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு. கடவுள் மேல் தவறில்லை. முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்றது தாய் ஆந்தை. அப்படி என்ன தவறு செய்தார்? என்று கேட்டன குஞ்சுகள். ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகத்திடம் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை சரியில்லை. அதனால், காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் காக்காவை வைத்தியம் பார்த்து குணமாக்கி விட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்து விட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். குயில் டாக்டருக்கு பயந்து நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டாமல் நன்றாக தூங்கிவிட்டு இரவில் எழுந்து வெளியே செல்வார். இப்படியே இருந்ததால் குயில் டாக்டரால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் கோபமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டி இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல் காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது. அன்றிலிருந்து குயில் இனத்தார் முட்டைகளை காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது. நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது என்றது தாய் ஆந்தை. அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருநாளும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம், என்றது அந்த இரு ஆந்தைக்குஞ்சுகள். செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை. நீதி : பிறரை ஏமாற்றினால் நமக்கு தண்டனை தானாக வந்து சேரும்.
Unknown Share as Image


storiesகொக்குக்கு எத்தனை கால்கள்? ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும், அவருக்குத் துணையாக ஒரு சமையல்காரரும் இருந்தனர். ஒரு நாள் வீட்டுக்காரர் கொக்கு ஒன்றை வாங்கிவந்து சமையல்காரரிடம் கொடுத்து கொக்கு குழம்பு வைக்கும்மாறு சொன்னார். சமையல்காரர் குழம்பு வைத்ததும், குழம்பையும் சிறு அளவு கறியையும் சுவைப் பார்க்கலாம் என்று கால் துண்டு ஒன்றை முழுவதும் சாப்பிட்டு விட்டார். பின்பு சோறு பரிமாறப்பட்டதும், வீட்டுக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த கொக்கின் கால் ஒரு துண்டை முதலில் எடுத்துவைத்தார். இன்னொரு கால் துண்டையும் வை என்றார் முதலாளி. கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி என்றார் சமையல்காரர். கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே? என்றார் முதலாளி. இல்லீங்க ஒரு கால்தானுங்க என்றார் சமையல்காரர். முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார். வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக்கொண்டு ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த சமையல்காரர் பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக் கால்தான் என்று முதலாளியிடம் காட்டினார். உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும் தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு தனது இரு கால்களையும் மடக்கி கொண்டு பறக்க ஆரம்பித்தது. பார், கொக்கிற்கு இரு கால்கள் என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி. நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால் கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே என்றாராம் சமையல்காரர்.
Unknown Share as Image


storiesகைமேல் பலன் கிடைத்தது அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான். ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்காய் போய் விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான். சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.
Unknown Share as Image


storiesகுரங்கும் ஒற்றுமையற்ற பூனைகளும் ஒரு நாள் இரண்டு பூனைகள் சேர்ந்து ஒரு வீட்டில் ஒரு அப்பத்தை எடுத்தது. அந்த அப்பத்தை இரண்டாகப் பிரிக்கும் போது ஒரு பூனை, அப்பம் சரி சமமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்று மற்றப் பூனையுடன் சண்டையிட ஆரம்பித்தது. பின் யாரிடமாவது சென்று அப்பத்தைப் பங்கிடுவோம் என்று தீர்மானித்தன. அதனால் இரண்டு பூனைகளும், அப்பத்தைப் பங்கு பிரிப்பதற்காக ஒரு குரங்கிடம் சென்றன. குரங்கும், அப்பத்தைச் சமமாகப் பிரிக்க ஒரு தராசில் அப்பத்தை இரண்டாக வெட்டி ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு துண்டை வைத்து நிறுத்துப் பார்த்தது. தராசின் ஒரு தட்டு கீழே தாழ்ந்தது. அப்பொழுது குரங்கு, அந்தத் தட்டில் இருந்த அப்பத்துண்டை எடுத்து ஒரு கடி கடித்துத் விட்டு மீதியை தட்டில் போட்டது. இப்பொழுது, மற்றத் தட்டுக் கீழே தாழ்ந்தது. அந்தத் தட்டிலிருந்த அப்பத்தையும் குரங்கு எடுத்துக்கடித்து விட்டுத் தட்டில் போட்டது. இப்படியே தட்டுகள் மாறி மாறித் தாழ்ந்தன. குரங்கும் மாறி மாறி அப்பத் துண்டுகளைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தது. அப்பம் குறைவதை பார்த்த பூனைகள், தங்கள் தவறை உணர்ந்து பங்கு பிரிக்க வேண்டாம். நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று மீதமுள்ள அப்பத்தைத் தரும் படி கேட்டன. ஆனால் குரங்கு, மீதமுள்ள அப்பம், தான் இது வரை செய்த வேலைக்குக் கூலி, என்று சொல்லி விட்டு அதையும் வாயில் போட்டுக்கொண்டது. ஒற்றுமையற்ற பூனைகள் ஏமாந்து கவலையுடன் திரும்பிச் சென்றன. நீதி : விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பல நஷ்டங்களை தவிர்கலாம்.
Unknown Share as Image


storiesகிணற்றில் விழுந்த நரி ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துடுச்சாம். விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்துச்சி. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்துச்சி நரி. பத்து நாட்கள் கடந்து போச்சி. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே. . . மே. . . ன்னு கத்திக்கிட்டே வந்துச்சி. உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைச்சி எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்துச்சி. என்ன நரியாரே. . . தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே. . . சே. . . நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணத்துக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணத்துத் தண்ணீ ரொம்ப சுவையா இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சிப் பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே. . . இந்தத் தண்ணீ சுவையா ஒன்னும் இல்லையே. . . உன்னை நம்பி வந்தேன் பாரு. . . இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம். . கையை கொடு. . என்னைச் சீக்கிரமா காப்பாத்து. . . என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.
Unknown Share as Image


storiesகிணற்றில் விழுந்த நரி ஒரு நாள் ஒரு நரி கிணற்றில் தவறி விழுந்துடுச்சாம். விழுந்த அந்த நரி, யாராவது வந்து தன்னை காப்பாற்றுவார்கள் எனக் காத்திருந்துச்சி. ஆனால், ஒருவரும் அந்தப் பக்கம் வரவேயில்லை. அதனால், சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தண்ணீருக்குள்ளேயே தவித்துக்கொண்டிருந்துச்சி நரி. பத்து நாட்கள் கடந்து போச்சி. அன்னைக்கு அந்தப் பக்கமாக ஓர் ஆடு, மே. . . மே. . . ன்னு கத்திக்கிட்டே வந்துச்சி. உடனே நரி உஷாரானது. இந்த ஆட்டை வைச்சி எப்படியாவது மேலே வந்துவிட வேண்டும் என்று நரி நினைத்துக்கொண்டது. ஆடு அண்ணா, இங்கே வாயேன் என்று அன்போடு அழைத்தது நரி. கிணற்றில் இருந்து வந்த குரலைக் கேட்டதும், ஆடு எட்டிப் பார்த்துச்சி. என்ன நரியாரே. . . தவறி விழுந்துட்டீயா? என்று கேட்டது ஆடு. சே. . . சே. . . நானாவது விழுவதாவது. நான் வேணும்னுதான் கிணத்துக்குள்ளே இறங்கினேன். இந்தக் கிணத்துத் தண்ணீ ரொம்ப சுவையா இருக்கு. நீ வேணும்னா இறங்கி வந்து குடிச்சிப் பாரேன் என்றது நரி. ஆடு கொஞ்சமும் யோசிக்கவில்லை. உடனே கிணற்றுக்குள் குதித்தது. நரியே. . . இந்தத் தண்ணீ சுவையா ஒன்னும் இல்லையே. . . உன்னை நம்பி வந்தேன் பாரு. . . இப்போ எப்படி வெளியில போறது? என்று கேட்டது ஆடு. முதல்ல உன் மேலே ஏறி நான் வெளியே போறேன். அப்புறம் கையை நீட்டறேன். கையைப் பிடிச்சிக்கிட்டு நீயும் வெளியே வந்துடு என்றது நரி. ஆடும் ஒப்புக்கொண்டது. ஆடு மீது ஏறி நரி வெளியே வந்தது. ம். . கையை கொடு. . என்னைச் சீக்கிரமா காப்பாத்து. . . என்றது ஆடு. உன்னை நான் எப்படிக் காப்பாத்துறது? எதைச் செஞ்சாலும் விவேகமா, புத்திசாலித்தனத்தோட செய்யணும். இப்போவாவது புரிஞ்சுக்க. நான் வரேன்னு சொல்லிவிட்டு நரி கிளம்பியது. தன் முட்டாள்தனத்தை நினைத்து ஆடு வருந்தியது.
Unknown Share as Image


storiesகாக்கா உட்கார பனம் பழம் விழுந்தது இரண்டு ஜப்பானியர்கள் நியுயார்க் சென்றார்கள். அங்கே நகரத்தைச் சுற்றிப் பார்க்க ரயில் நிலையம் சென்றனர். அங்கு ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்கள் நிறைய இருந்த ஒரு பழக்கடையில் அவர்கள் இதுவரைப் பார்க்காத ஒரு பழத்தைப் பார்த்து கடைக்காரரிடம் இது என்னப் பழம் என்று கேட்டார்கள். அவர் இது வாழைப்பழம் என்று சொல்லி எப்படி உரித்துத் தின்பது என்றும் செய்து காண்பித்தார். நம் ஜப்பானிய நண்பர்கள் மகிழ்ச்சியுடன் ஆளுக்கு ஒரு பழம் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். ரயில் புறப்பட்ட பின் இருவரும் பழத்தை சாப்பிட ஆரம்பித்தனர். முதலாமவன் பழத்தை முதல் கடி கடிக்கும் போது ரயில் ஒரு சுரங்கப் பாதைக்குள் நுழைந்தது. உடனே ரயில் பெட்டிக்குள் இருட்டாக பரவியது. அவன் உடனே இரண்டாமவனிடம் நண்பா, அந்தப் பழத்தை சாப்பிடாதே. நான் ஒரே ஒரு கடி கடித்த உடனே குருடாகி விட்டேன். அந்தப் பழத்தில் விஷம் இருக்கிறது. தயவு செய்து சாப்பிட்டு விடாதே என்றான் அவன். இருவரும் பழத்தை சாப்பிடாமலே சென்றனர்.
Unknown Share as Image


storiesஎலியின் பசி ஒரு ஊரில் ஒரு எலி இருந்துச்சாம். . . அது ரொம்ப நாள் பட்டினியா இருந்துச்சு. ஒரு நாள் எலிக்கு ரொம்ப பசியாம். அச்சமயம் ஒரு கூட்டை பாத்துச்சாம். அந்த கூட்டுக்குள்ள உள்ளே நுழைய சின்ன ஓட்டை தான் இருந்துச்சு. . . கஷ்டப்பட்டு உள்ளே நுழைஞ்சுதாம். அங்கு சோளம் இருந்துச்சாம். ஆசையா வயிறுமுட்ட சாப்பிட்டுச்சாம். சாப்பிட்டு எலி குண்டாயிடுச்சு. எலி வெளியே வர பார்த்துச்சு. . . . . . அந்த சின்ன ஓட்டையில வெளிய வரமுடியாம உள்ளயே மாட்டிகிச்சு பாவம். நீதி : பேராசை இருத்தல் கூடாது.
Unknown Share as Image


storiesஎல்லாம் நன்மைக்கே ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அந்நாட்டு அமைச்சர் எது நடந்தாலும் எல்லாம் நன்மைக்கே! என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் இருவரும் பேசிக் கொண்டிருந்தபொழுது அரசன் மாம்பழம் ஒன்றைக் கத்தியால் அறுத்தான். தவறுதலாகக் கத்தி அவனின் சுண்டு விரலை அறுத்து விட்டது. வலி தாங்க முடியாமல் அரசன் துடித்தான். வழக்கம் போல் அமைச்சர், அரசே! எல்லாம் நன்மைக்கே! என்றான். இதைக் கேட்டுக் கோபமடைந்த அரசன், நான் விரல் வெட்டுப்பட்டுத் துடிக்கிறேன். எல்லாம் நன்மைக்கே என்று சொல்கிறாய். காவலர்களே அமைச்சரைச் சிறையில் கொண்டு போய் அடையுங்கள் என்று உத்தரவிட்டான். காவலர்களும் அமைச்சரை சிறையில் அடைத்தனர். அப்போதும் அமைச்சர், எல்லாம் நன்மைக்கே! என்றார். நாட்கள் பல கடந்தன. வேட்டையாடுவதில் ஆர்வமுடைய அரசன் தனியாகக் காட்டிற்குச் சென்றான். அங்கே மலைவாசிகள் காளிக்குப் பலி கொடுப்பதற்காக ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் அரசன் சிக்கிக் கொண்டான். அங்கு வந்த கோவில் பூசாரி அரசனை முழுமையாகச் சோதித்தான். பின்பு, காளிக்கு எந்தக் குறையுமில்லாதவனை மட்டுமே பலியிட முடியும். இவனோ சுண்டு விரல் பாதியாக உள்ளான். இவனை விட்டு விடுவோம் என்றான். அரசன்! அரண்மனைக்கு வந்ததும் உடனடியாக அமைச்சரை விடுவிக்க உத்தரவிட்டான். நடந்ததை எல்லாம் அமைச்சரிடம் சொன்ன அரசன், சுண்டு விரல் வெட்டுப்பட்டதால் உயிர் பிழைத்தேன். அன்று எல்லாம் நன்மைக்கே என்று நீர் சொல்லியதன் உண்மையை அறிந்தேன் என்றான். அரசே என்னைச் நீங்கள் சிறையில் அடைத்ததும் நன்மைக்கே. எப்பொழுதும் உங்களைப் பிரியாமலிருக்கும் நான், என்னைச் சிறையிலடைக்காமல் இருந்திருந்தால் உங்களுடன் காட்டிற்கு வந்திருப்பேன். அந்த மலைவாசிகள் எந்தக் குறையும் இல்லாத என்னை அவர்கள் பலியிட்டு இருப்பார்கள். நீங்கள் என்னைச் சிறையில் அடைத்ததால் நான் உயிர் பிழைத்தேன் என்றார் அமைச்சர். நீதி : எது நடந்தாலும் நல்லதையே நினைத்துக்கொள்ள வேண்டும்.
Unknown Share as Image


storiesதானத்தில் சிறந்தவர் கர்ணன் பாண்டவர்களுக்கு ரொம்ப நாட்களாகவே நம்முடைய அண்ணன் தர்மரும் தானம் செய்வதில் சிறந்தவர். ஆனால் கர்ணனையே ஏன் எல்லாரும் தானம் செய்வதில் சிறந்தவன் என்று கூறுகின்றனர் என்ற சந்தேகம் இருந்தது. இவர்களின் சந்தேகத்தை அறிந்த கிருஷ்ணன் ஒரு நாள் தங்கமலை, வெள்ளி மலை என இரு மலைகளை உருவாக்கி பாண்டவர்களை அழைத்து இந்த இரு மலைகளையும் பொழுது சாய்வதற்குள் தருமம் செய்துவிட்டால் தானத்தில் சிறந்தவர் தர்மர் என்று நீங்கள் சொல்வதை ஒப்புக் கொள்கிறேன் என்றார். பீமனும், அர்ஜுனனும் மற்றவர்களும் அந்த இரு மலைகளில் இருந்து தங்கத்தையும், வெள்ளியையும் பாளம் பாளமாக வெட்டி எடுத்துத் தர தர்மர் அதை உடனுக்கு உடன் நகர மக்களுக்குத் தானம் செய்தார். தானம் செய்ய செய்ய அவ்விரு மலைகளும் வளர்ந்து கொண்டே இருந்தன. தங்கமும் வெள்ளியும் குறையவே இல்லை. மாலைப் பொழுது வந்ததும் எங்களால் முடியாது கண்ணா! என்று தன் தோல்வியை ஒப்புக் கொண்டார் தருமர். உடனே கிருஷ்ணன் கர்ணனை வரவழைத்து கர்ணா! இதோ பார் இந்த இரண்டு மலைகளில் ஒரு மலை தங்க மலை. மற்றொன்று வெள்ளி மலை இதை நீ பொழுது சாய்வதற்குள் தானம் செய்ய வேண்டும். பொழுது சாய இன்னும் ஒரு நாழிகைப் பொழுதே உள்ளது. உன்னால் முடியுமா? என்று கேட்டார். உடனே கர்ணன், இதில் யோசிக்க என்ன இருக்கிறது இப்போதே செய்து காட்டுகிறேன் என்று கூறி அங்கிருந்த இருவரை அழைத்து, நீங்கள் இருவரும் ஆளுக்கொரு மலையாக இவற்றை எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறி தனது தர்மத்தை முடித்து விட்டுக் கிளம்பினான். பாண்டவர்கள் அசந்து போயினர். அவர்களை ஒரு அர்த்தப்பார்வையுடன் பார்த்து சிரித்தார் கிருஷ்ணன். தர்மருக்கும் பரந்த மனசு தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால், அவரைக்காட்டிலும் தான தருமம் செய்வதில் பரந்த மனசு உடையவன் கர்ணனே என்பதால் தானத்தில் சிறந்தவர் கர்ணனே என்று பாண்டவர்களுக்கு உணர்த்தினார் கிருஷ்ணன்.
Unknown Share as Image


storiesஎன் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது😞😒 எவனோ ஒருவன் போல் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன்😞 தாடி வளர்க்கும் வயதும் இல்லை😣 போடி என்று சொல்ல மனமும் இல்லை என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள் அவரோடு நின்று நிழற்படம் எடுத்து கொள்கிறாள்😓😔 கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள் அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்😥😖 அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல் இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி😘😒 நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள்😞😘 அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது😏 அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை அணிந்திருக்கிறாள்😐😑 அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல😪 யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள் இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்😰😞 ஏமாந்தவன் எதிரிலே இருக்க இன்னொருவனுடன் உனக்கு திருமணம்😏😣 இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும் கணவன் இருக்கிறான் பாசத்தோடு😘😖 உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான் ஊமையாக இருக்கிறேன்😷😓 அவள் என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன் வெகுண்டெழுந்து வருகிறது அழுகை😪😢 அதை கை குட்டையும் கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன் 😞😖 வெள்ளி தட்டில் அட்சதை வருகிறது நானும் அதை எடுத்துக்கொண்டேன் 😘😣 மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள் தலை குனிகிறாள் அவர் தாலியை கட்டி விட்டார் 😪😓 நானும் அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும் வாழ்க என்ற எண்ணத்தோடு😪🙏 அவள் என்னை பார்க்கிறாள் இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம் என்ற எண்ணத்தில் 😣😓😞 அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய் நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்😓😢😣 நடிக்க தெரியாத நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்😞😣😖 எல்லாம் முடிந்து விட்டது என்று அவள் எண்ணலாம் 😞😠 ஆனால் இதுதான் ஆரம்பம் என்று அவளுக்கு தெரியாது 😃😠 அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன் 😣😓 என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு கட்டிய காதல் கோபுரம்😭😥 சித்தெரும்பை விட சிறியதாக சிதறி போனது
Sethupathi Share as Image


storieshttp://way2.co/ODMzNzE3/2 என் காதலியின் திருமணம் எதிரே நடந்து கொண்டிருக்கிறது😞😒 எவனோ ஒருவன் போல் நான் அமர்ந்து கொண்டிருக்கிறேன்😞 தாடி வளர்க்கும் வயதும் இல்லை😣 போடி என்று சொல்ல மனமும் இல்லை என்னோடு நின்று புகைப்படம் எடுக்க மறுத்தவள் அவரோடு நின்று நிழற்படம் எடுத்து கொள்கிறாள்😓😔 கண்ணத்தில் முத்தமிட மறுத்தவள் அவர் ஏதோ காதருகில் சொல்ல இவளும் கூர்ந்து கேட்டு கொண்டிருக்கிறாள்😥😖 அழகான கூரை புடவை கட்டி மூன்றாம் பிறைநிலா போல் இருக்கும் நெற்றியில் நெற்றிச்சுட்டி😘😒 நான் பிடித்து முத்தம் கொடுத்த கைகளில் மருதாணி போட்டிருக்கிறாள்😞😘 அதன் வாசம் இங்கு வரை வீசுகிறது😏 அவள் கழுத்தில் ஏறவே வரம் வாங்கி வந்த மாலை அணிந்திருக்கிறாள்😐😑 அடிக்கடி என்னையும் பார்க்கிறாள் யாரோ ஒருவரைப் போல😪 யாருக்கும் தெரியாமல் இருட்டிலே என்னோடு கை கோர்த்து நடந்தவள் இன்று ஆயிரம் பேர் முன்பு அக்னியை சாட்சி வைத்து சுற்றி வருகிறாள்😰😞 ஏமாந்தவன் எதிரிலே இருக்க இன்னொருவனுடன் உனக்கு திருமணம்😏😣 இதற்கு நான் சாட்சியா என்று அக்னி கொழுந்துவிட்டு எரிகிறது அவள் கழுத்திலே தாலி கட்டப்போகும் கணவன் இருக்கிறான் பாசத்தோடு😘😖 உண்மைகள் அனைத்தும் தெரிந்தும் நான் ஊமையாக இருக்கிறேன்😷😓 அவள் என்னோடு பழகியதை நினைத்து பார்க்கிறேன் வெகுண்டெழுந்து வருகிறது அழுகை😪😢 அதை கை குட்டையும் கண்ணாடி வைத்தும் மறைக்கின்றேன் 😞😖 வெள்ளி தட்டில் அட்சதை வருகிறது நானும் அதை எடுத்துக்கொண்டேன் 😘😣 மந்திரங்கள் ஓத மேலங்கள் ஒலிக்க அவள் தலை குனிகிறாள் அவர் தாலியை கட்டி விட்டார் 😪😓 நானும் அட்சதை தூவினேன் எங்கிருந்தாலும் வாழ்க என்ற எண்ணத்தோடு😪🙏 அவள் என்னை பார்க்கிறாள் இவனை பெரிதாய் ஏமாற்றி விட்டோம் என்ற எண்ணத்தில் 😣😓😞 அவள் ஏற்றிய காதல் நாடகத்தில் அழகாய் நடித்து முடித்து மணமேடை ஏறி விட்டாள்😓😢😣 நடிக்க தெரியாத நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றேன்😞😣😖 எல்லாம் முடிந்து விட்டது என்று அவள் எண்ணலாம் 😞😠 ஆனால் இதுதான் ஆரம்பம் என்று அவளுக்கு தெரியாது 😃😠 அவள் கண்களில் இருந்து கண்ணீர் சிந்த கூடாது என்பதற்காகவே அவளை விட்டு விட்டேன் 😣😓 என் மனதில் நிலவை நின்று தொடும் அளவிற்கு கட்டிய காதல் கோபுரம்😭😥 சித்தெரும்பை விட சிறியதாக சிதறி போனது
Share as Image